கந்தளாய், தம்பலகாமம், சேருவில போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் பெருந்தொகையான மக்கள் தமது பிரதான வைத்தியசாலையாக கந்தளாய் ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கந்தளாய் வைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரிக்கும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை போன்ற தூர வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், ஐ.ஓ.சி எரிபொருள் கம்பனியின் வேண்டுகோளுக்கு இணங்க, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பின் அடிப்படையில் புதிய இரத்த வடிகட்டும் இயந்திரம் வழங்கப்பட்டன.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெ.ஜெ.முரளிதரன்,மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.