காஸாவில் நடந்தேறும் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான நீதியின் குரல்.

நீதிக்கான குரல் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் காஸாவில் பலியாகும் மனித உயிர் இழப்புக்களை நிறுத்துக் கோரி கண்டியிலுள்ள சர்வ மத தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஊடக மா நாட்டினை கண்டி டெவோன் ஹோட்டலில் நடத்தினர். இதன் போது பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர்.
வேவெல ஸ்ரீசுர்தராம விஹாராதிபதி குருநாகல்  பிரதான சந்தே கந்தேமுத் பஞ்யா கீர்த்தி தேரர் ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையிலான போரினால் மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த யுத்தம் பற்றி எமது நாட்டையும் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறிய பிள்ளைகள், பெண்கள், முதியர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது தொடர்பில்  நாங்கள் கவலையுற்றுள்ளோம். அந்த வகையில் யுத்தம் என்று சொல்வது எங்களுடைய பௌத்த தர்மத்தின்படி யுத்தத்தை அனுமதிப்பதில்லை. எல்லோரும் தண்டனைக்கு பயந்தவர்கள். மரணத்திற்குப் பயந்தவர்கள். அதன் காரணமாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டு அடுத்துவர்களையும் பாதுகாக்குமாறு சமய போதனைகள் கூறுகின்றன.   நாம் தண்டனைக்குப் பயம் என்றால், மரணத்திற்குப் பயம் என்றால் அடுத்துவர்களுக்கு இதனைச் செய்வது பெரிய பிழையாகும். இந்த யுத்தத்தின் காரணமாக பச்சிளம் குழந்தைகள், பெண்கள், அந்நாட்டிலுள்ள பெரு எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
ஆதலால் இந்த யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்து நீதிக்கான குரல் அமைப்பின்  வேண்டி நிற்கின்றோம். அங்கு நடைபெறும் யுத்தத்தை கொடூரத்தை அனுமதிக்க முடியாது என்று இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கட்டுக்கலை அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அ~;n~ய்க் ராபி கருத்து தெரிவித்த போது மிலேசத்தனமான கொடூரமான யுத்தத்தின் காரணமாக பெரு எண்ணிக்கையிலான மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். எந்தவிதமான காரணமுமின்றி மனிதர்களைப் படுகொலை செய்வது அதாவது ஒரு மனிதனைக் கொலை செய்தால்  எல்லா மனிதர்களையும் கொலை செய்தமைக்குச் சமனாகும். கொடூரமான முறையில் காஸாவில் மனிதர்களை கொன்று  குவித்து வருகிறார்கள். எந்த இனமாக இருந்தாலும் எந்த சமயத்தவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் மனிதர்களை கொன்றொழிப்பது நாங்கள் அனுமதிக்க முடியாது. நிச்சயமாக இதற்கு மாற்று நடவடிக்கை கிடைக்கும். நாங்கள் எல்லோரும் ஆதம் (அலை) அவர்களுடைய  சந்ததியினர்கள். அவர்கள்  நாங்கள் கௌரவமாக வாழத்தான் படைத்துள்ளோம் என்று  அல்குர்ஆன் கூறுகின்றது.
இன்று சிறார்கள்.பெண்கள் தாய்மார்கள், முதியர்வர்கள் கொன்று ஒழித்து வருகிறார்கள். நாங்கள் ஒன்றிணைந்து இந்த மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்வதோடு இந்த மிலேச்சத்தனமாக மனித படுகொலை அங்கீகரிக்க முடியாது. இலங்கையின் கண்டி வாழ் சிங்கள, தமிழ். கிறிஸ்த முஸ்லிம் ஆகிய மக்கள் ஒன்றினைந்து  நீதிக்கான குரல் அமைப்பின் ஊடாக  உடன் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்படுதுடன் இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஐக்கிய நாடுகள் சபை முன் வர வேண்டும் எனவும் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிலதிபர் யூ. எம். பாசில்  கருத்தினை முன்வைத்த போது
இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தமானது மிகப் பெரிய அவலங்களைக் கொண்டு வந்திருப்பதை நாங்கள் காணுகின்றோம். இது யுத்த தர்மத்தின் எல்லைகளைத் தாண்டிச் சென்று  கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. மனித நாகரீகம் அடைந்துள்ள இந்தக் காலத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டிய இடத்திற்கு  கொண்டு சென்றிருப்பதை நாம் பார்க்கின்றோம்.
ஒன்றுமே அறியாத சிறுவர்கள் பெண்கள் உட்பட வைத்தியசாலையில் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் கூட இதனால் கொல்லப்படுகின்றார்கள். ஆகவே அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  இதை உலக நாடுகள் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது இரு அணிகளாப் பிரிந்து அரசியல் செய்யக் கூடிய நேரம் அல்ல.  இது மனித நாகரீகத்திற்கு ஒரு இழுக்கான செயலாக எங்களை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நீதிக்கான குரல் என்ற அமைப்பின் ஊடாக சர்வதேச உலகிற்கும் ஐ. நாடுகள் சபைக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.
அருட்திரு யூடான் யலோ பீரிஸ் கருத்தினை முன் வைத்த போது
யாராவது சரி ஒருவரைக கொலை பலி எடுப்பதாயின் அதில் எந்தவிதமான நியாயத்தையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை  நினைவூட்டிக் கொள்ள விரும்புகின்றேன். அது பற்றி எல்லா சமயங்களும் சமயத் தலைவர்களும் எங்களுக்கு போதித்துள்ளன.  கிறிஸ்த சமயமும் பைபிலும் இதைத்தான் கூறுகின்றன. இறைவன் மனிதனுக்கு எந்தளவுக்கு கண்ணியப்படுத்த வேண்டும் என்று எமக்கு கூறியுள்ளான். அதே போன்றுதான் கிறிஸ்தவ பைபிலும் போதிக்கின்றன.
இந்த உலகில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலினால் சிறார்கள் கொன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள், குடும்பங்கள் அனைவருக்கும் இறைவனுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும். இந்த மக்கள் யுத்த அவலத்திலிருந்து  விடுபடுதற்கு  உலக நாடுகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் எல்லோரும் அன்புடனும் நேசத்துடனும் புரிந்துணர்வுடனும்  சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்ள இறைவன் நல்லாசி புரிய வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
முன்னாள் யட்டி நுவர பிரதேச சபையின்  உறுப்பினர் வசீர் முக்தார் கருத்தினை முன் வைக்கும் போது மத்திய கிழக்கு இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான மோதலில் காஸா பகுதியில்  சிறு பிள்ளைகள கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கொடிய வன்முறை நிறுத்தப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள், போன்ற வர்களுடைய உயிர் காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் 4000 க்கும் மேற்பட்ட உயிர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த  அவல நிலை வெகு சீக்கிரமாக  நிறுத்தப்பட வேண்டும்.  யுத்த நிறுத்த முடிவுக்கு கொண்டு வரப்படுதல் வேண்டும்.
அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள்  இஸ்ரேலுக்கு வழங்கக் கூடிய பங்களிப்புத் தான் இந்தளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்ல முக்கிய காரணம் எனலாம். 1948 தொடக்கம் இன்று வரை இந்தப் பலஸ்தீன மக்கள் படும் துன்பங்கள் அவலங்கள் உயிரிழப்புக்கள்  போன்ற தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை  பெற்றுக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன் வருதல் வேண்டும்.  அன்று ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல்  நாட்டைப் பெற்றுக் கொடுக்க முன் நின்றார்களோ இந்த  காஸா மக்களுடைய  உயிரைப் பறிக்கின்ற மிகப் பயங்கரமான யுத்தத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காஸா மக்களுடைய மக்களுடைய பாதுகாப்பு உத்தரவாத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை மும்முரமாகச் செயற்பட்டு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதேவேளை அம்மக்களுக்கு உணவு. நீர், குடி, நீர் மருத்தவ வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்று எமது கோரிக்கையினை முன் வைக்கின்றோம்.
இதில் கணக்காளர் முபாரக் மாநகர சபை உறுப்பினர்  அஸ்மி மரைக்கார், ரேனுக்கா உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரைக்களை ஊடங்களுக்குப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
(இக்பால் அலி)