திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு. 

(ஹஸ்பர்)   திருகோணமலை மாவட்டத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு கூட்டமானது மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றது.
மதரீதியான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை புரிந்துணர்வுடனும் குறித்த பிரச்சினைகள் வருவதற்கு முன்னர்
பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் புதிய பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மதங்களுக்கு இடையில் நட்புறவினை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த சமூகங்களை உருவாக்குதல் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.