மூதூரில் ஒற்றைப்பனை சிறுகதை நூல் வெளியீடு.

(எம்.ஏ.ஏ.அக்தார்) மூதூரின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி சுஸானா முனாஸ் எழுதிய ஒற்றைப்பனை சிறுகதைத் தொகுப்பு நூல் கடந்த வியாழக்கிழமை மூதூர் பேர்ல் கிராண்ட் மண்டபத்தில் வெளியீடு  செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமையுரையை கவிஞர் சுஹைதா ஏ கரீம் அவர்களும்,  அறிமுகவுரையை பன்னூல் ஆசிரியர் மூதூர் முகைதீன் அவர்களும் நூல் திறனாய்வை எழுத்தாளர் கதிர் திருச்செல்வமும் நிகழ்த்தினர்.
10 சிறுகதைகளை உள்ளடக்கிய 88 பக்கங்களை கொண்ட இந்நூல் Mutur JMI Publication நிறுவனத்தினால் பதிப்பு செய்யப்பட்டதோடு இந்நூல் நூலாசிரியரின் கன்னி நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.