சர்வதேச சிறுவர் வார மற்றும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலய குளுவினமடு பிரிவில் முதல் நிகழ்வாக கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு மற்றும் சிறுவர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வும் சத்திய பிராமண நிகழ்வும் 2023-10-17ம் திகதி இன்று காலை பாடசாலை ஒன்றுகூடலினை தொடர்ந்து நடைபெற்றது.
மேலும் இரண்டாவது நிகழ்வாக சமுர்த்தி பயனாளிகளினால் சிரமதானம் கிராம அலுவலகத்தில் இடம்பெற்றது. மேலும் குளுவினமடு மற்றும் கொல்லநுலை ஆகிய கிராம மட்ட அமைப்புக்களுக்கு வறுமை ஒழிப்பு, சமுர்த்தியின் புதிய பாதை, மற்றும் சேமிப்புக்கள் மூலம் வளமான எதிர்காலம் போன்ற விழிப்புணர்வு கூட்டங்களும் இடம்பெற்றன.
இந் நிகழ்வுகள் யாவும் கொக்கட்டிச்சோலை வங்கி வலய முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.சிவராசாஅவர்களின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.ருசகுமார் அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் வ.துசாந்தன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பிரதேச செயலக போதை தடுப்பு அபிவிருத்தி உத்தியோககத்தர் கே.மயூரி அவர்களின் பங்கு பற்றுதலுடன் 156 மாணவர்களின் பங்கேற்புடனும் சமுர்த்தி பயனாளிகளின் பூரண ஒத்துழைப்புடனும் நடைபெற்றது.