ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அலிசாஹிர் மௌலானா இன்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அரசாங்கப் பதவிக்காக வெளியேறிய திரு. நஸீர் அஹமட், முஸ்லிம் காங்கிரஸினால் வெளியேற்றப்பட்டதோடு, அந்தத் தீர்மானம் உச்ச நீதிமன்றத்தால் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. திரு நசீர் அகமதுவிற்கு பதிலாக அலிசாஹிர்  மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்
சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தாம் தயார் என  பா.உ அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.