மொட்டிலிருந்து வெளியேறிய 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்ட நடவடிக்கை.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்து சுயேச்சைக் குழுக்களாக செயற்படும் 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், இந்த குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சட்டத்தரணிகள் குழுக்கள் கட்சித் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.