(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் பாவனையற்ற முறையில் இருந்தமையால் அவற்றை மன்னார் நகர சபைக்கு வழங்கி மன்னாரில் இக் குறையை தீர்ப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் இதற்கான ஆளணிப் பற்றாக்குறையால் தீயணைப்புக்கான குறை தொடர்ந்து நிலவி வருவதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த வியாழக் கிழமை (12) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மன்னார் பிரதேச சபையிடமிருந்த தீயணைப்பு வாகனம் மன்னார் நகர சபையால் தற்பொழுது தொறுப்பேற்கப்பட்டிருப்தாகவும் ஆனால் இதற்கான ஆளணியினரை நிரந்தரமாக நியமிக்கக்கோரி வடமாகாணம் பிரதம செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் ஆளுனரின் உதவியுடன் இதற்கான தீர்வினை உடன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக நியமிக்கப்படும் ஆளணியினருக்கு மன்னார் நகர சபை சம்பளம் வழங்குவதற்கு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கான சிறந்த பயிற்சியும் வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.