உதயம் எனும் பத்திரிகை-வெப்தள நியுஸ், ஈ பேப்பர் வெளியீடு

அஷ்ரப் ஏ சமத்
சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்களை ஆசிரியரகக் கொண்டு உதயம் எனும் பத்திரிகை-வெப்தள நியுஸ், ஈ பேப்பர்  ஞாயிறு 15.10.2023 மருதானையில் உள்ள அல் ஷபா கட்டத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இப் பத்திரிகை சகல சமூகங்களையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் ”உதயம்” என பெயர்சூட்டப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் என்.எம் அமீன் அங்கு தெரிவித்தார். சுமார் மூன்று தசாப்பதங்களுக்கு முன் காலம் சென்ற சபாநாயகர் பாக்கீர் மாக்கார் தனது சொந்த நிதியில் இப் பெயரில் உதயம் எனும் பத்திரிகை வெளியீட்டார் . காலப்போக்கில் அவை நிதியின்மையினால் தொடார்ச்சியாக அப் பத்திரிகை வெளிவரவில்லை. இலங்கையில் முஸ்லிம்களுக்கென முதன் முதலில் அறிஞர் சித்திலெப்பை அவர்கள் த நேசன் எனும் பத்திரிகையை வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தில் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஜனாதிபதி சட்டத்தரனி சுகைர் அவர்கள் கூட பாமிஸ் எனும் பத்திரிகை ஒன்றையும் அக்காலத்தில் ஆரம்பித்திருந்தார். ஆனால் இந்த நாட்டில் 30க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள், 12க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்கள் , 25க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளாந்தம் வாரந்தமாக வெளிவருகின்றன.
ஆனால் வீரகேசரி பத்திரிகை மட்டும் முஸ்லிம்களது செய்திகள் அடங்கிய விடிவெள்ளி எனும் பத்திரிகையை வெளியிட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களது குரல் அவர்களது அடிப்படை பிரச்சினைகள் ஏனைய சமுகத்தினருக்கு கொண்டு செல்வதற்காக எமக்கென ஓர் ஊடகம் முஸ்லிம் சமுகத்தினரிடம் இல்லை. கடந்த காலத்தில் நவனமனி பத்திரிகை வெளிவந்தது.அது நிதியின்மையினால் தொடா்ந்து வெளிவரவில்லை. அதே போன்று முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களினால் யு.ரீ.வி என தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு அதுவும் அரசியல் மாற்றத்தினால் இடை நடுவில் நிறுத்தப்பட்டது.
இத்துறையில் முதலிடுவதற்காக தம் மத்தியிலிருந்து தனவந்தர்கள் முன் வருவதுமில்லை. இக் காலகட்டத்தில் தான் இப் பத்திரிகையை நாங்கள் ஈ பேப்பர் வடிவில் வெப்தள நியுஸ் வடிவில் வெளியிட எத்தனிக்கின்றோம். இதனை முன் கொண்டு செல்ல எமது சமுகத்தினரிலிருந்து ஆதரவு கிடைக்கும் என எதிர்பாா்க்கின்றோம். என அங்கு என்.எம். அமீன் உரையாற்றினார்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.எம். சுஹைர் மற்றும் கௌரவ அதிதியாக குலோபல் ரவல்ஸ் பிரைவட் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் றிஸ்மி றியால் கலந்து சிறப்பித்தார்கள். அஷ்ஷேக் தாசீம் மௌலவி, கலாநிதி எம். ரஸ்மின் ஆகியோறும் உரையாற்றினார்கள்.
இப் பத்திரிகையின் உப ஆசிரியர்களான சிராஜ் எம். சாஜகான், றியால் எம் புகாரி, எம்.ஜெஸ்மின் ஆகியோர்களது பங்களிப்புடன் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜெஸ்மின் அவர்களின் அனுசரனையில் உதயம் இஸ்லாமிய கலண்டர்களும் இலவசமாக வழங்கப்பட்டன.