(எம்.எம்.றம்ஸீன்) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக சிறுநீரக நோயாளிகள் எதிர்கொணட நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.ஐ.ஓ.ஸி.நிறுவனத்தின் பல இலட்சம் ரூபா நிதியுதவியில் கிடைக்கப்பெற்றுள்ள இவ் இயந்திரத்தின் மூலம் சிறுநீரக நோயாளிகள் உயிரிழப்பதனை தவிர்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிகழ்வு திருகோணமலை ஐ.ஓ.ஸி.தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.