முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு.

(அ . அச்சுதன்)    திருகோணமலை பாலர் பாடசாலை பணியகத்தின் அனுசரணையுடன் திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினம் திருகோணமலை நகரசபை மண்டபத்தில்  இடம் பெற்றது.

 இந்நிகழ்வில்  விருந்தினர்களாக
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் மஹ்ரூப் அவர்களும்
உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள்  உப தவிசாளர் A.L.M. நௌபர் அவர்களும்
பாலர் பாடசாலை நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. G.H. தாமர கீதானி அவர்கள்
உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். தவநாதன் அவர்கள்
சட்டத்தரணி திருமதி எஸ் .ஐஸ்வர்யா
பாலர் பாடசாலை கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.V. சர்மிளா அவர்கள்
சிறுவர் மற்றும் பெண்கள் நன்னடத்தை பிரிவு உதவிப் பொலிஸ் அதிகாரி திருமதி.O.M.U. துலாஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
  இவ்வைபவத்தில் ஆசிரியர்கள்  கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி V. சர்மிளா தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.