இந்திய வீரர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள்..- முரளிதரன்
நான் கூறும் அறிவுரைகளையோ, யோசனைகளையோ ஏற்க இலங்கை வீரர்கள் தயாராக இல்லை ஆனால், இந்திய வீரர்கள் தம்மைப் பின்தொடர்ந்து வந்து ஆலோசனை கேட்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சிரசதொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை ஏற்பட்டிருப்பது சமூக வலைதளங்களின் பின்னால் ஓடுவதால் தான் இலங்கை அணி வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களைப் புகழ்ந்துகொண்டு பல்வேறு அறிக்கைகளை தாங்களாகவே தொகுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் ஓடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.