கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த ஒரு குழுவினர் காலை நான்கு மணிக்கு முன்னர் அதிநவீன சக்தி வாய்ந்த இந்தக் கோபுரத்தை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்ட ரீதியற்ற முறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரம் குறித்து கல்முனை மாநகர சபை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தும் போது அப்பிரதேசத்தில் வாழும் பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெறாமல் , மக்கள் தூங்கும் வேளையில் கோபுரம் நாட்டப்பட்டதன் மர்மம் என்ன? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த பகுதியில் வாழும் குடியிருப்பு மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக இந்த கோபுரம் அமைக்கப்படுமாக இருந்தால், உடனடியாக கோபுரத்தை இப்பகுதியில் இருந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபுரம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இதனால் இப்பகுதி மக்கள் அடையப்போகும் பயன்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.