நற்பிட்டிமுனை பத்ரகாளியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா)  கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை ஸ்ரீ  பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை(15) ஞாயிற்றுக்கிழமை  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக உள்ளது.
 இந்த உற்சவம் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 24 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை பலிச்சடங்கு கொடுத்தலுடன் நிறைவடைய இருக்கிறது.
ஆலய  பூசகர் விஸ்வ பிரம்மஸ்ரீ மாசிலாமணி கிருபாகர் தலைமையில் தினமும் அதிகாலை 4:00 மணிக்கும் மாலை 4 மணிக்கு விசேட பூஜைகள் நடைபெறும்.
நாளை சம்பிரதாயபடி நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்திலிருந்து அம்மன் பேழை எடுத்துவரப்பட்டு திருக்கதவு திறக்கப்படும்.
14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மஞ்சள் குடபவனி அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைய உள்ளது.
21 ஆம் தேதி சனிக்கிழமை அம்மனுக்கு ஆயிரம் வாழைக்காய் குலைகள் மடுவில் இடப்பட்டு அம்மனை எழுந்தருளச் செய்யும் சடங்கு இடம்பெறும்.
24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதுக்கொடுத்தல் மடைப்பலி கொடுத்தல் திருப்பலி சடங்கு என்பன இடம் பெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.