தேசிய மட்டத்தில் சாதனை படைத்த  சிவானந்தா தேசிய  பாடசாலை மாணவர்களுக்கு கௌரவம்.

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த  சிவானந்தா தேசிய  பாடசாலை மாணவர்களுக்கு கௌரவம்  வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன் தலைமையில்

பாடசாலை மண்டபத்தில் (12) திகதி இடம்பெற்றது.

பாண்ட்  வாத்திய இசை முழங்க  அழைத்து வரப்பட்ட சாதனை மாணவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கத்தினை பெற்றுக்கொண்ட மாணவனையும், வெள்ளி பதக்கங்கள்  இரண்டினையும், வெண்கல பதக்கம் இரண்டினையும், Taekwondo போட்டியின் மூலம் வெண்கல பதக்கம் ஒன்றையும் பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் பழைய மாணவர் சங்க தலைவருமான வி.வாசுதேவன், பிரதி அதிபர் சுவர்ணேஸ்வரன், மல்யுத்த பயிற்றுவிப்பாளர் வீ.திருச்செல்வம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.