மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வியாழக் கிழமை (12) மாலை இணைத்தலைவர்கள் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கிராமிய பொருளாதார இராஜங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டமானது பிற்பகல் 7 மணி வரை றடைபெற்றது.

இக்கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன் , செல்வம் அடைக்கலநாதன் , திலிபன் உட்பட வட மாகாண சபை உயர் அதிகாரிகள் , மன்னார் மாவட்ட அரச திணைக்கள உயர் அதிகாரிள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களான மன்னார் நகர் . நானாட்டான் , முசலி . மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்டு எற்கனவே ஆராயப்பட்டு தீர்க்க முடியாத விடயங்கள் இங்கு ஆராயப்பட்டு அதற்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.