சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் எச்.ஐ.வி.துரித பரிசோதனை சேவை

(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய பிராந்திய பாலியல் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என் .எம் தில்ஷான் அவர்களினால் HIV துரித பரிசோதனையை மேற்கொள்வதற்கான விஷேட பயிற்சி ஒன்று, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தெரிவுசெய்யப்பட்ட தாதிய உத்தியோகஸ்த்தர்கள் சிலருக்கு   வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.எம்.எச்.எம். ஆஸாத் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள், HIV துரித பரிசோதனை சேவையை, இனி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலவசமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது