மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போக விவசாய செய்கைக்கு தேவையான யூரியா, ரி.எஸ்.பி, எம்.ஒ.பி போன்ற உள்ளீடுகளை விவசாயிகளுக்கு தடையின்றி பெற்றுக் கொள்வதற்கு உரக்கம்பனிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது
மாவட்டத்தின் 2023/2024 ஆண்டின் பெரும் போகத்திற்கான உரம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (11) இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் தனியார் கம்பனிகளின் கையிருப்பில் உள்ள உரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் உரத்தின் தரம் மற்றும் விற்பனை விலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், உதவி பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜின், உரக் கம்பனிகளின் பிரதி நிதிகள், முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.