மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு:
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூக்கு முன் ஆயத்தமாதல்  எனும்  தொனிப்பொருளில் விசேட செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (12) திகதி இடம் பெற்றது.

மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ்   முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அணுசரனையையில் இச் செயலமர்வு நடைபெற்றது.

இதன் போது அரச சேவையில் கடமையாற்றி ஓய்வூதியம் பெறவுள்ள சேவையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய அலுவலக நடவடிக்கைகள்,
அரசசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் EPF மற்றும் ETF இணை பெற்றுக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்  இதன்போது, அதிதிகளினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஓய்வுக்கு முன் உளவளத்தை மேம்படுத்து வதற்கான முன் ஆயத்தம் தொடர்பாக உளவள நிபுணர் எஸ்.ஸ்ரீதரனினால் ஓய்வூதியம் பெறவுள்ள உத்தியோகத்தர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந் நிகழ்வில் மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ப.விஷ்வகோகிலன், தொழில் உத்தியோகத்தர் திருமதி எம்.எம்.எஸ்.சிஹாரா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.