மண்டபம் முனைக்காடு கடற்கரையில் செவ்வாய்கிழமை (10) ஆளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை வைபர் படகை கண்ணுற்ற தமிழகப் பொலிசார் தேடுதலில் ஈடுபட்டபோது இருவர் மண்டபம் அகதிகள் முகாமில் பதுங்கி இருந்தமை பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
இந்திய தமிழ்நாடு மண்டபம் முனைக்காடு கடற்கரையில் செவ்வாய்கிழமை (10) ஆளில்லாமல் இலங்கைக்குரிய வைபர் படகு ஒன்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கரையோர பொலிசார் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டபோது சட்டவிரோதமாக இப்படகில் சென்ற இருவர் மண்டபம் அகதிகள் முகாமில் பதுங்கி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மரைன் பொலிசார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். ஆரம்ப விசாரணையில் இவர்கள் இருவரும் மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஜெகன் மற்றும் நாகேந்திரன் எனவும் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சென்ற நிலையில் மீண்டும் அங்கிருந்து தமிழகம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.