(ஹஸ்பர்) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10)இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரய்ச்சியின் ஏற்பாட்டில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அத்துகோரள, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க உட்பட்ட பிரதேச செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள் ,முப்படைகளின் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.