(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் நடமாடும் சேவை கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் நடாத்தப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களம், ஆயுர்வேத திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம், பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நடமாடும் சேவையினை
ஏற்பாடு செய்திருந்தன.கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
ஏற்பாடு செய்திருந்தன.கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் கே.இளங்குமுதன், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பல்வேறு சேவைகள் இதன்போது வழங்கப்பட்டதுடன் சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணிகளுக்கு உறுதியற்ற 350 பேருக்கான காணி உறுதிகளும் இதன்போது இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.