பிறிஸ்பேன் விளையாட்டு கழகத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழகத்தின் சகலதுறை வீரர் மர்ஹூம் ஷஹீத் ஞாபகார்த்தமாக மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற B25 வெற்றி கிண்ணத்தை மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகம் வென்றெடுத்தது.
அணிக்கு பதினோரு பேர் கொண்ட ஏழு ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக நடைபெற்ற இப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு மருதமுனை பிரிஸ்பேன், கல்பனா கழகங்கள் தெரிவாகியிருந்தன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்பனா விளையாட்டுக்கழகம் 7 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரிஸ்பேன் அணி இறுதி ஓவரில் இறுதி 2 பந்துகளில் 9 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் சிக்சர் அடித்து ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டது. இறுதியில் ஒரு ஓட்டத்தினால் கல்பனா விளையாட்டு கழகம் B25 சம்பியன் கிண்ணத்தை தன்வசப் படுத்திக் கொண்டது. சம்பியன் வெற்றிக் கிண்ணம் மற்றும் 30000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட பிறிஸ்பேன் அணிக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் 20000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. மிமா அணி மூன்றாம் இடத்தை பெற்று வெற்றிக் கிண்ணம் மற்றும் 10000.00 ரூபா பெறுமதியான பணப்பரிசிலையும் பெற்றுக் கொண்டது