மன்னாரில் பண்பாட்டுப் பெருவிழா

( வாஸ் கூஞ்ஞ)

வடக்கு மாகாண கல்வி  , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும்  , மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழாவை மன்னார் மாவட்ட செயலகத்தில்  மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் அதிதிகள் மற்றும் கலைஞர்கள் மன்னார் நகரின் சுற்று வலயத்த்pலிருந்து அழைத்து வரப்பட்டு அதிதிகளுக்கு பூரண கும்ப ஆராத்தியதைத் தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்த நிகழ்வுடன் விழா ஆரம்பமானது.

இவ்விழாவில் மன்னார் மாவட்ட கலைஞர்கள் 18 பேருக்கு ‘மன் கலைச்சுரபி’ , ‘மன் கலைத்தென்றல்’ மற்றும் ‘மன் கலைச்சுடர்’ என்னும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவானது மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ய.பரந்தாமன் தலைமையில் 06.10.2023 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கல்வி  , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன்

சிறப்பு விருந்தினராக பண்பாட்டலுவல்கள் அலகு கல்வி அமைச்சு பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி லா.நிரபராஷ்

மற்றும் கலாபூசணம் செபஸ்ரியான் மாசிலாமணி (நானாட்டான்) , கலாபூசணம் தம்பிப்பிளளை பர்ணாந்த பீரீஸ் (மன்னார் நகரம்) , மன் கலைச்சுரபி சபாரட்ணம் சிவதாசன் (மாந்தை மேற்கு) . கவிச்சுடர் அகமட் லெப்பே முளப்பர்கான் (முசலி) மற்றும் மன்கலைத்தென்றல் அலெக்ஸ் முடியப்பர் (மடு) ஆகியோர் கௌரவ விரந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அத்துடன் கலைத்தவக செபஸ்ரியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) அரங்கத்தில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.