(அ . அச்சுதன்) திருகோணமலை நகராட்சி மன்றத்தின் குளக்கோட்டன் தோப்பு சிறுவர் பூங்காவில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியத்தினால் சிறுவர்களுக்கான விளையாட்டு புகையிரத சேவை , உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல் படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (06) மாலை திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதி, மற்றும் அரச உயர் அதிகாரிகள், திருகோணமலை நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் பரமோஸ்வரன் உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் பாலர் பாடசாலை சிறுவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.