மண்முனை தென்மேற்கு கோட்ட ஆசிரியர் அணிகளுக்கிடையிலான எல்லே போட்டியில் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய அணி முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலின் கீழ், 21பாடசாலைகளை உள்ளடக்கிய 10அணிகள் இப்போட்டியில் பங்கேற்றிருந்தன.
குறித்த போட்டியின் இறுதிப்போட்டிக்கு கொக்கட்டிச்சோலை பாடசாலை ஆசிரியர் அணியும் முனைக்காடு பாடசாலைகளை உள்ளடக்கிய ஆசிரியர் அணியும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது முதலில் களமிறங்கிய முனைக்காடு பாடசாலைகளின் ஆசிரியர் அணி 4ஓட்டங்களைப் பெற்றனர் எதிர்தாடிய கொக்கட்டிச்சோலை பாடசாலை ஆசிரியர் அணி 5ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற ஆசிரியர் அணியினருக்கும், கோட்டப்பாடசாலை அதிபர்களுக்கான நட்பு போட்டியும் இடம்பெற்றது. இதன்போது அதிபர் அணிசார்ந்து வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் ஆகியோரும் விளையாட்டில் ஈடுபட்டனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.