ஆசிரிய தினத்தினைச் சிறப்பித்து ஆசிரியர்களை பிரதான சந்திகளில் நின்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் ஒக்டோபர் 6ஆம் திகதி வாழ்த்தி வரவேற்றனர்.
மாணவர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை வரவேற்று வாழ்த்தினர்.
அம்பிளாந்துறை துறை, மகிழடித்தீவு சந்தி , அம்பிளாந்துறை -பழுகாமச்சந்தி ஆகிய இடங்களில் வைத்து இவ்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வருடாந்தம் இச்செயற்பாட்டினை இவ்வித்தியாலய மாணவர்கள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.