தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினால் பசுக்கள் வழங்கி வைப்பு

தேசத்துக்கோயிலான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பசுக்கள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று(07) இடம்பெற்றது.

வறுமையான குடும்பத்திற்கு ஒரு பசு என்ற வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த ஆலயத்திற்கு நேர்த்தியாக வந்த பசுக்களை வழங்குகின்ற முதலாம் கட்ட ஆரம்ப நிகழ்ச்சியின் போது, படுவான்கரைப்பிரதேச எல்லைக்குட்பட்ட மண்முனை மேற்கு, போரதீவுப்பற்று, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறுபேருக்கு ஒவ்வொரு பசுவீதம் வழங்கி வைக்கப்பட்டன.

வண்ணக்கர் தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏனைய வண்ணக்குமார்கள், நிருவாகசபை அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.