மைலத்தமடு மாதவனையை சேர்ந்த பண்ணையாயாளர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக சுமங்கலிய ரத்தின தேரர் எனும் பௌத்த பிக்கு மற்றும் அவர் சார்ந்தோரினால் மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களுக்கும் எதிராகவும் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவருக்கு இதுவரை எவ்வித தடை உத்தரவு வழங்கப்படவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்
ஓர் நாடு இரு சட்டம். அனைத்து பொலிஸ் பாதுகாப்புடன் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இவ் பௌத்த பிக்கு மட்டக்களப்பு மக்களுக்கு அடிக்கடி இவ்வாறான நெருக்குதல்களை வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.