(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்று (06.10.2023) பாடசாலையின் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் உயர்தர மாணவர்கள் ஏற்பாடு செய்து நடாத்திய இந்த ஆசிரியர் தின நிகழ்வில் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள், மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மாணவர்களுக்கு விழிப்பூட்டும் கலை கலாசார நிகழ்ச்சிகள் ஆசிரியர்களால் இங்கு அரங்கேற்றப்பட்டன இது பெரும் வரவேற்பை பெற்றது. நிகழ்வின்போது எதுவித விடுமுறையையும் பெற்றுக் கொள்ளாத ஆசிரியர் அதிபரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.