(பாறுக் ஷிஹான்) உலக சிறுவர் தினத்தையொட்டி அறுவடை செய்யப்பட்டிருந்த டொம் டேசி மாம்பழ இனங்கள் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் உலக சிறுவர் தினத்தையொட்டி இடம் பெற்றிருந்தது.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட சுமார் 100க்கும் அதிகமான டொம் டேசி மாம்பழ இனங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இன்று(6) காலை பாடசாலை வளாகத்தில் வைத்து ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் சேர் கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் (நிர்வாகம் ) மற்றும் ஏனைய அதிதிகளாக முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.கமால் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.ரீ.எம்.அனப் உறுப்பினர்களான ரீ.எம்.இர்பான் ஜே.எம்.ஜெஸீல் ஐ.எம்.சமீறுல் இலாஹி பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம் .அஜ்வத் எம்.எம் முஹ்ஷீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான் அமீர் ஏ பாறூக் இமுன்னாள் நாவதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம். பி. அப்துல் றஹீம் பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் இணைந்து குறித்த மாம்பழ அறுவடை நிகழ்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.