இவ் ஊடக மாநாட்டில் கொழும்புக் கிளையின் தலைவர் ஈ.செந்தில்வேலவர், ஜேர்மன் நாட்டின் கிளைத் தலைவர் கிளை ஒருங்கிணைப்பாளருமான திரு.ராஜசூரியன் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து இங்கு திரு. ராஜசூரியன் கருத்து தெரிவிக்கையில் .
உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் பல நாடுகள் அங்கத்துவ மாகக் கொண்டு கனடாவில் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது. இவ் இயக்கம் முறையாக கனடாவில் பதியப்பட்ட ஒர் சர்வதேச இயக்கமாகும். கனடாவில் சட்டபூர்வமாக பதிந்து சின்னங்களும் பெறப்பட்ட இயக்கமாகும். இவ் இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.துறைராஜா கனேசலிங்கம், மற்றும் துறைராஜா,சிறப்புத் தலைவர் சிவா கணபதிப்பிள்ளை ஆகியோர்கள் இலங்கை வந்து இலங்கை மாநாடு சம்பந்தமான ஏற்பாடுகளை கொழும்பில் செயற்படுத்த உள்ளனர்.
கொழும்புக் கிளையின் தலைவர் ஈ.செந்தில்வேலவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்….
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கடந்த 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் சர்வதேச தமிழ் பண்பாட்டுக் கழகம் ஆகும். இதன் 50 ஆவது ஆண்டு பொன் விழா எதிர்வரும் 2024ல் ஆரம்பிக்கிறது. இதனை முன்னிட்டு எதிர்வரும் ஆண்டு ஆகஸ்ட்டில் கொழும்பில் பொன் விழாவினையும். 14வது கருத்தரங்கினையும் கொழும்பில் நடத்தப்படுவதை வரவேற்பதோடு இந் மாநாடு இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் ,சிங்கள மற்றும் ஏனைய சமூகங்களின் இணைத்துக் கொண்டு வெற்றிகரமாக நடாத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை கொழும்பு கிளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
|