துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு

இ.சுதாகரன்
துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு
துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்.ச.நவநீதன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர் கலாநிதி ந.புஸ்பராசா ,துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் அதிபர் தி.ஈஸ்வரன்,துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய பிரதகுரு கு.நல்லராசா குருக்கள் உட்பட்ட விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் ,பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மட்டு ,அம்பாறை மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தும் 64 நான்கு கழகங்கள் பங்கேற்ற இறுதிச்சுற்றுப் போட்டியில் ஒலுவில் லெமன் ஸ்டார் விளையாட்டுக்கழகன் சம்பியன் கிண்ணம் மற்றும் நாற்பதாயிரம் பணப்பரிசினையும் தட்டிக்கொண்டது.இரண்டாம் இடத்தினை அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டுக்கழகம் தனதாக்கிக் கொண்டதுடன் இருபத்து ஐயாயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டதுடன்குறிப்பிடத்தக்கது. வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.