(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக அரசாங்க அதிபர் நியமன வெற்றிடம் காணப்படுவதால் பல்வேறுவிதமான பிரச்சனைகள் தீர்க்கப்படாது காணப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் சனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் சனாதிபதிக்கு புதன்கிழமை (04) அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிடம் ஒரு மாதத்திற்கு மேலாக காணப்படுன்றது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் வருடந்தோறும் மேற்கொள்ளப்படும் பெரும்போகம் விவசாய நடவடிக்கைகள் தொடங்கவுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக பல பிரச்சனைகள் காணப்படுவதுடன் மாவட்ட ரீதியாகவும் பல விடயங்களுக்கு தீர்மானம் எடுப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகின்றது.
ஆகவே வலிமையான ஆளுமையுள்ள செயல்திறனுள்ள வல்லைமையுள்ள ஒருவரை மதவாதம் , அடிப்படைவாதம் , அரசியல் நோக்கு நிலைவாதம் கடந்து நிர்ணய நிலையில் உள்ள சமூக சம நீதியை பின்பற்றக்கூடிய ஒருவரை மிக விரைவாக நியமிக்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
மேலும் இங்கு காணி விடுவிப்பு உட்பட அரசியல் தீர்மானங்கள் யாவும் எமது மாவட்டத்தில் ஒழுங்காக நிகழ்வதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டப்படுவதுடன்
மிகப்பலவீனமான அரசியல் தலைவர்கள் உள்ளதால் நிர்வாகத் தலைமைக்கு ஆவது ஆளுமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இவ்வாறு வேண்டியுள்ளார்.