தேசிய மட்டத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சுவீஸ் அமைப்பு நிதி உதவி.

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் புனித ஆனாள் தேசிய கல்லூரியிலிருந்து தேசிய மட்டத்தில் விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களின் செலவீனத்துக்காக புனித ஆனாள் , கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரால் உதவித் தொகை பணம் (ரூபாய் 40000)) கையளிக்கப்பட்டுள்ளதாக இதன் இணைப்பாளர் சுணேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புனித ஆனாள் , கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பின; இணைப்பாளர் சுணேஸ் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் வங்காலை புனித ஆனாள் தேசிய கல்லூரியிலிருந்து வீரர்கள் தேசிய எல்லே விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள செல்வதால் இவர்களின் செலவினத்துக்காக இப்பாடசாலை நிர்வாகம்  புனித ஆனாள் , கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இதற்கமைவாகவே இவ் அமைப்பினர் வியாழக்கிழமை (05) காலை கல்லூரியின் தற்போதைய அதிபர் அருட்சகோதரர் சாந்தன் அவர்களிடம் 40000 ரூபா கையளிக்ததாக தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் அலுவலகத்தில் வைத்து இத் தொகை கையளிக்கப்பட்டபோது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜெ.மெல்பர். டலிமா , பாடசாலை விளையாட்டு துறை ஆசிரியர் , புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்குழு வங்காலை சுவிஸ் அமைப்பின் செயலாளர் திரு. விக்மன் லியோன் மார்க் , அமைப்பின் உப தலைவி விஜிதா , அமைப்பின் நிதி பொறுப்பாளர் அமல் சதீஸ்  ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் சுவீஸ் அமைப்பானது கடந்த அண்மைக் காலமாக கல்வி மற்றும் சுற்றாடல் சம்பந்தமான விடயங்களில் கவனம் செலுத்தி பலவிதமான உதவிகளை செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.