விபுலானந்தாவில் ஒஸ்கார் ஏற்பாட்டில் கற்றல் தேர்வு ஊக்குவிப்பு நுட்பங்கள்  செயலமர்வு.

( வி.ரி.சகாதேவராஜா)  அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின்(AUSKAR) அனுசரணையில் காரைதீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் கபொத உயர் தர பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஊக்குவிக்கும்
நோக்கோடு கற்றல் தேர்வு ஊக்குவிப்பு நுட்பங்கள்  செயலமர்வு நடாத்தப்பட்டது.
பிரபல தொழில்சார் ஊக்குவிப்பு பயிற்சியாளர் கலாநிதி. கே.ரி.பிரசாந்தன் இச் செயலமர்வை நடத்தினார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜே.டேவிட் , உதவிக்கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான வி.ரி.சகாதேவராஜா ,
ஒஸ்கார் செயற்குழு உறுப்பினர் இ.பிரதீபராஜ் கேடிபிஎஸ் தலைவர் மு.ரமணீதரன், சண்முகா அதிபர் செ.மணிமாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ் அமர்வுகளில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மற்றும் சண்முகா மகா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயல் அமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இச்செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணை வழங்கிய AUSKAR அமைப்பினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்தது.