கேரள கஞ்சாவுடன்  பெண் ஒருவர் கைது 

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சந்தேகத்தில் கைது

இச் சம்பவம் புதன்கிழமை (04) மதியம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  மன்னார் போதை ஒழிப்புப் பொலிசாருடன் இணைந்து  நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் வீடு ஒன்றை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தப்பட்ட போது அவ்வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சாப் பொதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒரு பெண் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட வர் மீது பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்ட பின்னர் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் கைப்பற்றிய பொருளுடன் சந்தேக நபரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது