வெல்லாவெளியில் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின சிறப்புக்கள்.  

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) போரதீவுப்பற்று பிரதேச செயலகமும்  சமுர்த்தித் திணைக்களமும் இணைந்து உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில்  ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தின விழா வெல்லாவெளி பிரதேசத்தின்  பலாச்சோலை கருணைமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில்  (03) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன்  தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில், கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டதுடன்  மாணவர்கள் பலருக்கு கற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன.அத்துடன் பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பிரிவில்  சித்தி பெற்ற மாணவர்கள், மற்றும் விசேட ஆற்றல்களை வெளிப்படுத்திய சிரேஷ்ட  பிரஜைகள்  பலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டதுடன் சிறார்கள் பலர் பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்படமையும் விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், கணக்காளர் தி. அம்பிகாபதி, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அ.குககுமரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ. ஜெயராஜா உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் எனப்  பலர் கலந்து கொண்டனர்.