(கனகராசா சரவணன்)
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயில் வீதிகடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி தடம்பிரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிசார்; தெரிவித்தனர்.
ஏறாவூர் 3ம் பிரிவு பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய அப்துல் ரஹ்மான் ரமிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சகக்கரவண்டி ஒன்றை செலுத்தி சென்ற சாரதி ஏறாவூர் ஜின்னா வீதி ரயேல்வே கடவையை கடக்க முற்கட்ட நிலையில் மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற ரயிலுடன் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி சென்றர் சம்பவ இடத்த்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை பிரதேச பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.