மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  மாரடைப்பு தொடர்பான விழிப்புணர்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  மாரடைப்பு மற்றும் அதன் தீவிரமான விளைவுகளை எதிர் கொள்ளுதலுக்கான  விழிப்புணர்வு  நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) இடம் பெற்றது.

அண்மைக்காலமாக இளவயதுடையவர்கள் மாரடைப்பின் காரணமாக பாதிக்கப்படுவதனால் இளைஞர் யுவதிகளுக்கு மாரடைப்பு
தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்டிருந்தது.மாரடைப்பு எற்படும் நபருக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் செயல் முறை ரீதியாக வைத்தியர் ஆர்.ராஜவர்மனினால்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு  வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி மதிவந்தன், வைத்தியர் மைத்திரை என பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தினால்  மக்களை விழிப்புட்டும் நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.