மன்னாரிலும் சட்டத்தரனிகள் பணிப்புறக்கணிப்பு.

( வாஸ் கூஞ்ஞ)   முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவண்ராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாண சட்டத்தரனிகள் திங்கள் கிழமைத் (03) தொடக்கம் கால வரையறையற்ற தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதை தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னாரிலும் சட்டத்தரனிகள் தங்கள் பணியை புறக்கணித்துள்ளனர்.

அத்துடன் மன்னார் சட்டத்தரனிகள் பலர் முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றின் முன்பாக திங்கள் கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மன்னார் நீதிமன்றங்களில் திங்கள் கிழமை நடைபெற்ற வழக்குகளில் சட்டத்தரனிகள் முன்னிலையாகாமையால் வழக்குகள் யாவும் பிறிதொறு திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.