பற்றிமாவில் சிறுவர் தினம்.

(வி.ரி.சகாதேவராஜா)  கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின்   சர்வதேச சிறுவர் தின நிகழ்வும்,மாணவர் தலைவர்களுக்கான தினமும்  (3) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து கல்முனை ஹற்றன் நாஷனல் வங்கி முகாமையாளர் வி.நிர்மலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மாணவர் தலைவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டன. பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.