சிறுவர் தினத்தில் சகல மாணவர்களுக்கும் உணவளித்த ஆசிரியர்கள்.

( காரைதீவு   சகா)  சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய நிகழ்வில் பாடசாலையில் பயில்கின்ற சகல மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் மதியபோசனத்தை மனமுவந்து வழங்கினார்கள்.
 இந்நிகழ்வு சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நேற்று(2) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது .
சர்வதேச சிறுவர் தின நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.. பிரதம அதிதியாக பாடசாலை இணைபாளரும் உதவி கல்வி பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
 அங்கே மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு நடந்தது .குறிப்பாக கயிறுஇழுத்தல் போட்டி, சங்கீதக் கதிரை ,சங்கீத தொப்பி மற்றும் பாடல் பேச்சு என்பன இடம் பெற்றன .
வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் 500 மாணவர்களுக்கும் புறியாணி போசனம் ஆசிரியர்களின் முழுப் பங்களிப்போடு இடம் பெற்றது.