மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் 155 வது ஜனன தினம் அனுஷ்டிப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   மகாத்மா காந்தியின் 155 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.  மட்டக்களப்பு காந்தி பூங்காவில்
அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் (02) திகதி  திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.   மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதன் போது மட்டக்களப்பு மாவட்ட முன்னால் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் பாடி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.