(எம்.எம்.ஜெஸ்மின்)
கடந்த சில தினங்களாக கிழக்கு கரை மப்பும் மந்தாரமுமாக இருந்த போதிலும் இடைக்கிடை மழையும் பெய்து வருகின்றது.
பெரும் காற்றுடன் சில வேளைகளில் மழை பொழிய ஆரம்பித்தாலும் சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து விடுகின்றது. இருந்தும் கடந்த புதன் கிழமை சிறிது நேரம் பெய்த மழையினால் கல்முனை – மட்டக்களப்பு பிரதான விதியின் மருதமுனை வளைவுப் பகுதில் பெரு வெள்ளம் பரவிச் சென்றதோடு
சிறிது நேரம் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.