இளைஞர் விளையாட்டு விழா 2023

திருகோணமலை  மாவட்ட பட்டனமும் சூழலும் பிரதேச  செயலக  இளைஞர் சம்மேளனத்தின்  2023 ஆண்டுக்கான  இளைஞர்  விளையாட்டு விழா  நாளை (28) காலை  8.30 மணிக்கு  ஏஹம்பரம் விளையாட்டு  மைதானத்தில்  நடைபெறவுள்ளது.

இளைஞர்  விளையாட்டு  விழாவுக்கு  பிரதம விருந்தினராக பட்டனமும் சூழலும்  பிரதேச  செயலாளர் பீ.தனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக திருகோணமலை  மாவட்ட தேசிய  இளைஞர்  சேவை  மன்றத்தின்  உதவிப் பணியாளர்கள் எஸ்.கொடின்கடுவ ஆகியோர்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும்  பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 42 இளைஞர்  கழகங்களில்  அங்கம் வகிக்கும்  இளைஞர் யுவதிகள்  நிகழ்ச்சிகளில்  பங்கு பற்றவுள்ளனர்.

இதில் வெற்றி  பெறும்  இளைஞர்  யுவதிகள் மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு  போட்டியில்  பங்குபற்றுவதற்கான தகுதியினை பெறுவார்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது