(கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தாயாருக்கு கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரையும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் சந்தேகத்தில் நடமாடிய மற்றும் குடிபோதையில் மோட்டர்சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட 4 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஜயந்திபுர பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டபோது அதை தடுக்க முற்பட்ட தாயரின் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து அவர்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாயார் மீது தாக்குதலை மேற்கொண்ட மகனை கைது செய்தனர்.
அதேவேளை புதூர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்
இதனை தொடர்ந்து வீதிபோக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு; கொண்டிருந்த பொலிசார் வீதியால் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி சோதனையின் அவர் மதுபோதையில் இருப்பதை கண்டு அவரை கைது செய்யனர்.
இந்த வேவ்வேறு 3 சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.