தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் சுவாமி மட் விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது
இந்நினைவேந்தல் நிகழ்வில் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தியமை குறிப்பிடத்தக்கதது.