(ஏ.எஸ்.மெளலானா)
SERLIN நூலக உறுப்பினர்கள் மற்றும் நூலகர்களுக்கு Empowering Libraries with the Power of Research எனும் கருப்பொருளில் தென்கிழக்கு பல்கைலக்கலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பயிற்சிப் பட்டறை பல்கைலக்கலக நூலகத்தின் பிரதான கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
நூலகர் எம்.எம்.றிபாயுடீன் தலைமையில் இம்பெற்ற
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கைலக்கலக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.
இதில் இந்திய பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணி ராஜன் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரையாற்றியதுடன் பயிற்சிகளையும் வழங்கினர்.
இதன்போது YM Trust Australia அமைப்பினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதியான புத்தகங்கள் SERLIN அமைப்பின் அங்கத்துவ நூலகங்களான கல்முனை மற்றும் மருதமுனை பொது நூலகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இவற்றை நூலகா்களான ஏ.எல்.எம். முஸ்தாக், எம்.ஏ.சி. ஹரீஸா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் டபிள்யூ.ஜே.ஜெயராஜ், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகா்களான எம்.சி.எம்.அஸ்வா், கலாநிதி எம்.எம்.மஷ்ரூபா, ஏ.எம்.நபீஸ், எஸ்.எல்.எம்.சஜீா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.