(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தின் கல்வி விளையாட்டு கலை மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பானது எதிர்காலத்தில் வெப்பத்தை தணிககும் தொணிப்பொருளில் மரநடுகையையும் முன்னெடுத்துள்ளனர்.
இயற்கையை நேசித்து மரங்களை நடுவதன் மூலம் வெப்பத்தை தணிப்போம். என்னும் தொணிப்பொருளில் புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக் குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக ‘கிறீன் லேயர் என்வெர்மென்ட்’ அமைப்பினர் ஊடாக வழங்கப்பட்ட மரக்கன்றுகளின் முதல் கட்டமாக வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் 23.09.2023 (சனிக்கிழமை) மரம் நடுகை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பானது கல்வி மற்றும் விளையாட்டு சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றதில் இத்திட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையை நேசித்து மரங்களை நடுவதன் மூலம் வெப்பத்தை தணிப்போம் என்னும் தொணிப்பொருளில் மேற்கொள்ளப்படும் இதன் முதல் திட்டம் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடும் வைபவம் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ளு..றொஷாந்தி மற்றும் வங்காலை புனித ஆனாள் தேசிய பாடசாலையின் அதிபர் பிரான்சிஸ் ஸ்டான்லி டிமெல். லெம்பேட் மற்றும் பாடசாலை பழைய மாணவ சங்கத்தினர் ஆரம்ப பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் புனித ஆனாள் தேசிய பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தினர் மற்றும் ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர்கள் இவர்களுடன் இணைந்து புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக் குழு வங்காலை சுவிஸ் அமைப்பினர் கலந்து கொண்டு மரங்களை நடுகை செய்து வைத்தார்கள்.